Mai 9, 2024

உக்ரைனுக்கு மேலும் மிக-29 போர் விமானங்கள்: உறுதியறுத்தது போலந்து!

FILE PHOTO: A Polish Air Force MiG-29 aircraft fires flares during a performance at the Radom Air Show at an airport in Radom August 24, 2013. REUTERS/Kacper Pempel

கம்உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முதல் போலந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நேற்றுப் புதன் கிழமை தனது முக்கிய கூட்டாளியான உக்ரைனுக்கு மேலதிக மிக்-29 போர் விமானங்களை போலந்து உறுதியளித்தது.

சோவியத் காலத்து விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப போலந்து திட்டமிட்டுள்ளதாக அவரது போலந்துப் பிரதிநிதியான Andrzej Duda கூறினார்.

பராமரிப்புக்கு உட்பட்ட மேலும் ஆறு மிக-29 விமானங்களை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அவை ஒப்பீட்டளவில் விரைவாக வழங்கப்படலாம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என்று அவர் கூறினார்.

டுடாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மேலதிகமாக, ஜெலென்ஸ்கி அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்குச் சென்றார். உக்ரேனிய அகதிகளைச் சந்தித்தார். மேலும் தனது நாட்டின் எதிர்கால புனரமைப்பு குறித்த பொருளாதார மன்றத்தில் பங்கேற்றார்.

போரில் இருந்து தப்பிக்க எல்லையைத் தாண்டி ஓடிய 1.5 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்களுக்கு உதவியதற்காக மட்டுமல்லாமல், அதன் தற்போதைய ஆதரவுக்காகவும் போலந்துக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சைகையாக அவரது வருகை காணப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert