Mai 9, 2024

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

சுவிசில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றதான புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக செயற்பாட்டாளர் நிதர்சன் தெரிவித்தார்.

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜீன் 13 மக்கள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், எமது ஊடகத்தின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

சுவிஸ் மத்திய அரசின் நீதித் துறையால் கொண்டுவரப்படும் இச்சட்டத்தில் சில தீர்மானங்கள் ஆபத்தை ஏற்பத்துவதாக அவர் கூறினார்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், சுவிஸில் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரக்கூடும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் போன்றதாக இது இருக்கலாம் என சட்டத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சட்டம் எவ்வாறான தீர்மானங்களை உள்ளடக்கியுள்ளது? வாக்கெடுப்பின் போது மக்கள் – குறிப்பாக தமிழ் மக்கள் எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும் என பல விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அவர் தெரிவித்த விடயங்கள் காணொனி வடிவில்