Mai 8, 2024

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரரைச் சுட்டுப் பிடித்த காவல்துறை

லார்டின்-செயிண்ட்- லாசரே  Lardin-St-Lazare கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் பதுங்கியிருக்கும் முன்னாள் பிரஞ்சு இராணுவ வீரர் ஒருவரை தேடும்பணியில் கடந்த 24 மணி நேரம் பிரான்ஸ் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கைது செய்யப்பட்டுள்ளார்.29 வயதான டெர்ரி டுபின் என காவல்துறையினரால் பெயரிடப்பட்ட இந்த நபர், சனிக்கிழமையன்று அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் ஒரு காட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சிறப்புப் படைகளுடன் துப்பாக்கிச் சூட்டின் போது அவர் காயமடைந்தார். மேலும் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டொர்டோக்னிலுள்ள லு லார்டின்-செயிண்ட்-லாசாரேவில், டுபின் முன்னாள் இராணுவ கூட்டாளியின் வீட்டில் ஒரு தகராறு ஏற்பட்ட பின்னர், சனிக்கிழமை முதல் குறித்த இராணுவ வீரரை வலைவீசித் தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

சந்தேக நபர், கத்தி மற்றும் நீண்ட தூர வேட்டை துப்பாக்கியால் ஆயுதம் ஏந்திய காடுகளுக்கு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப வன்முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ வீரரை தேடும் பணி முடுக்கி விடுக்கப்பட்ட நிலையில் அக்கிராமத்தில் உள்ள 1,800 குடியிருப்பாளர்களையும் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிட்டுள்ளனர் காவல்துறையினர்.

இராணுவ வீரரைப் பிடிக்க 300 மேற்பட்ட ஜொன்தாமோி காவல்துறையினர் மோப்ப நாய்கள், நான்கு கவசவாகனங்கள், உலங்கு வானுர்திகளைப் பயன்படுத்தி 4 சதுர கிலோ மீற்றர் காட்டை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.