மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில்கள் திறக்கப்பட்டன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் பக்தர்கள் அதிகளவு கூடும் விழாக்களுக்கு கோயில் வளாகத்திற்குள் மட்டுமே நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா பக்தர்கள் இன்றி இந்த ஆண்டு நடைபெறுகிறது.தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிவியில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவை பக்தர்கள் கண்டுகளிக்க ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.