Mai 10, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்! மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள தமிழர்… அவர் யார் தெரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல்! மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள தமிழர்... அவர் யார் தெரியுமா?

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் Democratic கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரஸ்டன் நெல்சன் என்பவரை அவர் தோற்கடித்துள்ளார்.

மொத்தமாக பதிவான வாக்குகளில் ராஜா 71 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளார்.

ராஜாவின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.

டெல்லியில் பிறந்த ராஜா தற்போது Illinois மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.