September 26, 2023

வடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி?

வடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகியுள்ளனர்.

இலங்கை காவல்துறை வாக்களிப்பு வாக்களிப்பு நிலையங்களினுள் முடங்கியிருக்க வெளியே சாதாரணமாக நுழைவாயிலில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோக்கள் சகிதம்  சுமந்திரன் ஆதரவு நபர்கள் பகிரங்கமாக மக்களை அச்சுறுத்துவது அம்பலமாகியுள்ளது.
இதனிடையே சவாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு சிலர் வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் வெளிப்புற மற்றும் உட்புற காட்சிகளை இன்று மாலை 5.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.