தேர்தல் விதிமுறையை மீறிய 3 இளைஞர்கள் கைது..!!

தேர்தல் விதிமுறையை மீறிய  3 இளைஞர்கள் கைது..!!

தேர்தல் விதிமுறையை மீறி இன்ற அதிகாலை சுவரொட்டிகள் ஒட்டிய 3 இளைஞர்களை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுதந்திரக்கட்சி வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் சுவரொட்டிகளை ஏழாலை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த 3 இளைஞர்களே, சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, நேற்று இரவு வரை அங்கஜன் இராமநாதனின் யாழ் அலுவலகத்தில் இருந்து 3இற்கும் அதிகமான தொலைபேசி இலக்களின் வழியாக மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை தொடர்பு கொண்டு, அங்கஜனிற்குத்தானே வாக்களிக்கப் போகிறீர்கள் என வினவினர்.

பிரச்சார நடவடிக்கையின் போது, ஒவ்வொரு வீட்டிலும் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து, தொலைபேசி இலக்கங்களை பெற்ற அங்கஜன் இராமநாதனின் பிரச்சார குழு, அந்த தொலைபேசிகளிற்கு அலுவலகத்திலிருந்த தொடர்பு கொண்டனர்.

தவிரவும், நேற்று மாலை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் துண்டுப்பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.