November 22, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கை கோர்த்த முஸ்லீம் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை இன்று வியாழக்கிழமை விலக்கிக்கொண்டுள்ளது.இதனிடையே தமிழ் சட்டத்தரணிகளுடன் பத்திற்கும் அதிகமான முஸ்லீம் சட்டத்தரணிகள் இணைந்து நினைவேந்தல்...

தமிழீழத்தில் நடைபெறும் தமிழின அழிப்பு கண்காட்சி .

முள்ளிவாய்க்காலில்  தமிழின அழிப்பு செய்யப்பட்ட தமிழர்களை  நினைவு வணக்கம் செலுத்தும் விதமாகவும்   சிங்கள  பேரினவாத   அரசினால்  முன்னெடுக்கப்பட்ட  முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட  தமிழின அழிப்பு காட்சிப்படுத்தும் விதமாகவும்   முன்னெடுக்கப்படும் ...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2024

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம்அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2024

  யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள் இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் மகள் தீபிகா,...

மே 18 ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுகோள்!

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும்...

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதியானது: பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது அநீதியானது என்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் (Pazha Nedumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்....

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு..!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் பொதுச்சுடர்...

முல்லைத்தீவு நகரை சுற்றி வட்டமிடும் உலங்குவானூர்தி!

 முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஈழத்து மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் ஒவ்வொரு வருடமும்...

ஈழ தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

அமெரிக்காவில் வசிக்கும் ஈழ தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் அணிதிரள்வோம் – ​24.06.2024

24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  இன்று 15 ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் மீதான...

பொன் சிவகுமாரன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

இன்றைய தினம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி  இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வினை முன்னிட்டு இன்றைய தினம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடித்த இந்தியா!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய அரசாங்கம் (Government of India) தீர்மானித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை...

முள்ளிவாய்க்கால் நினைவு மே18 கஞ்சி வழங்ய வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத தலைவி கைதுசெய்யப்பட்டள்ளார்

இன்று 14.05.2024 ம் திகதி காலை கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ அரசடியம்மன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு மே18 கஞ்சி வழங்கும் செயற்பாட்டிற்காக ஒன்றுகூடிய அம்பாரை மாவட்ட...

நினைவேந்தலை அடக்கினால் மீண்டும் இருண்ட யுகம் உருவாகும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்.

தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஏவி விட்ட வன்முறையும் அதனால் ஏற்பட்ட பாரிய இனவழிப்பு முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி வாக்களித்த சொந்த மக்களால் வரலாற்றில்...

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவி உட்பட்ட 4 பேர் சிறையில்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான  பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

தென்தமிழீழத்தில் நடாத்தப்பட்ட பராம்பரிய மாட்டுவண்டிச் சவாரி

ருகோணமலை -சம்பூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர் மாட்டு வண்டில் சங்கம்...

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு கருத்தமர்வு.

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இன...

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

ழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள் - மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடு நினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்று தேசவிடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்குப் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழ நடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப் போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின் ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின்  பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசு இறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின் அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான்  என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர். உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர் இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர் அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச் சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என அறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்க வேண்டும்.  இவ்வறிவிப்பின் ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இவையெல்லாம் சரிவர நடந்தேறினால், தேசியத்தலைவரின் சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால் அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால் உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும் என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமது எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவான நிகழ்ச்சிநிரலாகும். தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமான இப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்ப அங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில் போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும் சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கைகள்  களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதி திரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின் அரசியல் கட்டுக்கதைகளை முத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்ற காகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப் பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும் சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டை அழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பை இல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அன்பார்ந்த மக்களே! ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின் வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்பு நடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும் சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும் நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக் கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின்  சிந்தனை மூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளை விளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால் உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானது இதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாக நம்புகிறோம். பேரன்புமிக்க எமது மக்களே ! காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம் கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறான உண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப் புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்....

தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு

 15 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15வது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு சிறீலங்கா அரசு...

சிறீதரன் தனித்து சந்தித்தார்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் தற்கால...

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான சூரியப் புயல் வீசியது!!

கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் சூரியப் புயல் நேற்று வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியது. இது உலகம் முழுவதும் இரவில் கண்கவர் நிறங்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த சூரிய...