Dezember 3, 2024

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் அணிதிரள்வோம் – ​24.06.2024

24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ 

இன்று 15 ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எவ்வித நீதியும், அரசியல் தீர்வும்வழங்காத போதிலும் எமது நீதிக்கான உரிமைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் காலத்திலும் விடஅதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டிய காலகட்டத்தில் நிற்கின்றோம்.

இவ் வேளையில் எதிர்வரும் ஜூன் 24   திங்கள்  காலை 11 மணிக்கு ஐரோப்பிய முன்றலில் எமது நீதிக்கான போராட்டத்தை வலுவோடு முன்னெடுக்க வேண்டிநிற்கின்றோம்.  

வரலாறு எம்மை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எமது தேசம், வரலாற்றில் என்றுமில்லாதவாறுமும்முனை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஆயினும், உரிமைக்கான போராட்டம் எக்கட்டத்திலும்கைவிடப்படமுடியாதது

போராடுவோம்! 

இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம் போராடுவோம்!

விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோஅல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழவிடாமுயற்சியுடன் எழுவது.

ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில்  அலையென எழுவோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert