முள்ளிவாய்க்கால் நினைவு மே18 கஞ்சி வழங்ய வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத தலைவி கைதுசெய்யப்பட்டள்ளார்
இன்று 14.05.2024 ம் திகதி காலை கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ அரசடியம்மன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு மே18 கஞ்சி வழங்கும் செயற்பாட்டிற்காக ஒன்றுகூடிய அம்பாரை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரை அங்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலீசார் தடுத்து நிறுத்தியதோடு அவர்களை கைது செய்ய முற்பட்டதோடு விஷேட அதிரடிப்படையினரையும் அழைத்திருந்ததை தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் துஷாநந்தனுக்கு வழக்கு இலக்கமும் குறிப்பிடப்படாத நீதிமன்ற தடையுத்தரவு ஒன்றினை வழங்கியதோடு அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர்,
இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட குழுவினரும் வலிந்து காணாமலாக்கப்பட்டஉறவுகளின் சங்கத தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடார்பில் முறைப்படுகளைப் பதிவு செய்ததோடு ஊடக சந்திப்பு ஒன்றையும் செய்திருந்தனர்.