September 16, 2024

பிரான்சில் நடைபெறும் வன்னிமயில் 12 ஆவது ஆண்டு முதல் மூன்று நாள் நிகழ்வுகள்!


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாக
வன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முதல் நாள் நிகழ்வுகள் கடந்த 25 ஆம் (சனி), 26 ஆம் (ஞாயிறு), மற்றும் 27 ஆம் (திங்கள்) நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமெனில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்றன. மூன்று நாட்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

தொடர்ந்து நாளை 04.03.2023 சனிக்கிழமை மற்றும் 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert