April 27, 2024

அஸ்ட்ரா செனெகா!! கொரோனா ஆபத்தைக் குறைக்க உதவுகிறது!!

கொவிட்-19 தடுப்பு மருந்துகளில் ஒன்றான அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்தின் கலவை கொரோனா தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்க உதவியதாக பிரிட்டிஷ் அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்தின் தயாரிப்பாளர் இன்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.

AZD7442 எனப்படும் இரண்டு நோய்எதிர்ப்புக் கலவை கொரோனா தொற்று மற்றும் இறப்பை 50 விழுக்காட்டால் குறைத்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோர் ஆரம்பத்திலேயே தடுப்பு மருத்தைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு வைரஸ் நோயால் பொிய பாதிப்புகள் ஏற்படாது என்றும், 6 மாதங்களுக்கு கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களைப் பாதுகாக்க இந்த மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அது கூறியுள்ளது.

AZD7442 இன் வசதியான இன்ட்ராமுஸ்குலர் டோஸ் இந்த பேரழிவு தரும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.