April 26, 2024

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு   நீண்ட கால நோய் அறிகுறிகள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு  3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சிரமமாக மூச்சு எடுத்தல், வயிற்று நோய் அறிகுறிகள், மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் ஏனைய வலிகள் என 9 விதமான நோய் அறிகுறிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகளில் மன அழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சிரமமாக மூச்சு எடுத்தல் :- 8%
வயிற்று நோய் அறிகுறிகள் :- 8%
மன அழுத்தம் :- 15%
நெஞ்சு மற்றும் தொண்டை வலி :- 6%
அறிவாற்றல் பிரச்சினைகள் :- 4%
சோர்வு :- 6%
தலைவலி :- 5%
தசை வலி :- 1.5 %
ஏனைய வலிகள் :- 7%

இந்த நோய் அறிகுறிகளுக்கு உள்ளாவோரில் பெண்களே அதிகம் என அவர் கூறியுள்ளார்.