Mai 4, 2024

தலிபான்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்திய பெண்.?

தலிபனுக்கு எதிராக போராடிய முதல் ஆப்கான் பெண் கவர்னர் சலீமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிபர் அஷ்ஃரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிராக தலிபான்களுக்கும், அரசு படைகளுக்கு இடையே கடும் போர் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த போரில் துப்பாக்கிசூடு மற்றும் குண்டு வெடிப்புகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாகவும்,அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டியிருந்தனர்.

தலிபான்கள் முதல் 3 நாள் ஆட்சியிலேயே மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள். முதலில் தங்கள் ஆட்சியில் பெண் அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும் என கூறியதுடன், பெரிய மாற்றமாக பெண் செய்தியாளர்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக பெண் செய்தியாளர்கள் பொது இடங்களில் செய்தி சேகரித்தனர். தலிபான்களிடமே மைக்கை நீட்டி பேட்டிகளை எடுத்தனர். எனினும், தலிபான்களின் பழைய ஆட்சி காரணமாக இன்னும் ஒரு அச்சம் அங்கு நிலவி வருகிறது.

இந்நிலையில்,கவர்னர் சலீமா மசாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் கவர்னரான சலீமா திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தலிபான்களின் ஆட்சி முறை மீதான கேள்வியை எழுப்பி உள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானின் முதல் பெண் கவர்னர்களில் ஒருவரான சலீமா மசாரி, தலிபான்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.