Mai 2, 2024

பிரித்தானியாவில் மீன் பிடிக்க சென்ற நண்பர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம்

பிரித்தானியாவில் மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவின், இங்கிலாந்தைச் சேர்ந்த Kyle Kavila, Gareth Valarino மற்றும் Sean Desuisa ஆகிய நண்பர்கள் கடந்த மாதம் ஜுலை 9-ஆம் திகதி, வழக்கம் போல் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் எப்போதும் தங்களுடைய பொழுதுபோக்கிற்காக மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் 15 அடி நீளம் கொண்ட படகில் கடலுக்குள் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களின் வலையில் பெரிய மீன் ஏதோ ஒன்று சிக்கியுள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் வலையை இழுத்த போது, மீன் அதிக எடையுடன் இருந்துள்ளது.

படகும் வெறும் 15 அடி நீள மட்டுமே என்பதால், அவர்கள் மீனை படகில் ஏற்றுவதற்கு போராடியுள்ளனர். அதன் பின் ஒரு வழியாக போராடி மீனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கரைக்கு கொண்டு வந்த பின்பு, மீன் ராட்சத அளவில் இருந்துள்ளது. இது சுமார் 328 கிலோ இருந்துள்ளது. அதன் பின் அது எந்த வகை மீன் என்று பார்த்த போது, இது Bluefin Tuna Fish என்பது தெரியவந்தது.

இது அதிக விலைக்கு போகும் மீன் ஆகும் என்பதால், அந்த மீனை அவர்கள் சுமார் மூன்றாக வெட்டி, சந்தையில் சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, மீதியை தங்கள் வீட்டிற்கும், நண்பர்களுக்கும் கொடுத்துள்ளனர்.

இவர்களின் வலையில் சிக்கிய இந்த ராட்சத Bluefin Tuna Fish- ஜப்பானில் விற்பனை செய்திருந்தால், அதன் விலை 10 முதல் 15 மடங்கு கூடுதலாக இருந்திருக்குமாம்.

ஏனெனில் ஜப்பானில் இந்த மீன் அதிக விலைக்கு விற்கப்படுமாம். மேலும், இதே Bluefin Tuna Fish ஜப்பானைச் சேர்ந்த Kiyoshi Kimura என்பவர் வலையில் சிக்கியுள்ளது.

அந்த மீனின் எடை 278 கிலோவாக இருந்தது, அதை அவர் 25 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ததே இதுவரை உலகசாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.