Mai 5, 2024

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சேவைத்துறைகென தனி வர்த்தக மையம் – சீன அதிபர் ஜி ஜிங்பிங்

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சேவைத்துறைகென தனி வர்த்தக மையம் ஒன்றை பெய்ஜிங் மாநகராட்சி நிறுவி நடத்தும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் வெள்ளிக்கிழமை என்று அறிவித்தார்.

பெய்ஜிங் நகரில் சீனாவின் 2020 ஆம் ஆண்டு சேவை வர்த்தகம் தொடர்பான சர்வதேச கண்காட்சியினை துவக்கி வைத்து பேசும் பொழுது இந்த அறிவிப்பினை ஜி ஜின்பிங் வெளியிட்டார்.

உலக சேவை வர்த்தக உச்சி மாநாட்டில் சர்வதேச கண்காட்சியினை துவக்கி வைத்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசினார்.

இந்த மாநாட்டு அரங்கில் நேரில் கலந்து கொள்கின்றவர்களையும், இன்டர்நெட் மூலமாக பங்கு கொள்கின்ற அனைவரையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக நாடுகள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடும் போராட்டத்தில் இருக்கின்றன.

இந்தப் பின்னணியில் சேவை வர்த்தகம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டை சீனா நடத்தி அந்த உச்சி மாநாட்டிலேயே சேவை வர்த்தகம் தொடர்பான சர்வதேச கண்காட்சி இணையும் திறந்து வைத்துள்ளது.

உலக நாடுகளுடன் எந்த அளவுக்கு சீனா ஒத்துழைத்து உலக வர்த்தக வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று திறந்து வைக்கப்பட்ட கண்காட்சி மற்றும் வர்த்தக மேடை சேவை வர்த்தகத்துக்கு என தனியாக அமைக்கப்பட்டதாகும்.

2012ம் ஆண்டில் இருந்து 6 முறை இந்த சர்வதேச சேவை வர்த்தக கண்காட்சி சீனாவில் நடத்தப்பட்டுள்ளது.