Mai 21, 2024

வீரியமடைந்த கொரோனா; ஜூன் 19 முதல் 30 வரை முழுமையான ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதே நேரம் கடந்த காலத்தில் முழு அங்கு உத்தரவு காலத்தின்போது எப்படியான தளர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு வழங்கப்பட்டதோ, போன்ற பணிகளுக்கு இப்போதும், தளர்வுகள் வழங்கப்படும். மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படும். வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 கொரோனா வைரஸ் நோயாளிகள் தமிழகத்தில் இறந்திருப்பதாகவும், 1,974 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் ,415 தொற்றுகளை பதிவு செய்ததோடு, 31,896 தொற்றுகளுடன் COVID-19 நோய்த்தொற்று அட்டவணையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கித்து வருகின்றமை குறிப்பிடத்தகது.