März 28, 2025

மரண அச்சுறுத்தல் :வேடுவத் தலைவர் முறைப்பாடு!

இலங்கையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ நேற்று கூறியதுடன், முதலிகேவுக்காகப் பேச தனக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

வசந்த முதலிகே தனது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் முழு நாட்டிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததார். அவர் ஏதேனும் அநீதியை எதிர்கொண்டால் அவருக்காக பேசுவதற்கு தலைவராக எனக்கு உரிமை உண்டு. இதற்காக கொலை மிரட்டல்களை சந்திக்க நேர்ந்தது. என்னை மிரட்டும் பெயர் தெரியாத கடிதம் கூட வந்துள்ளது,” என்றார்.

வசந்த முதலிகே ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்தால் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி அவருக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் அவர் நிரபராதி என்றால், அவரை மேலும் காவலில் வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert