März 28, 2025

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோகிராம் மஞ்சள்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோகிராம் மஞ்சள் பாசையூர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பாசையூர் பகுதிக்கு படகில் மஞ்சள் கடத்தி வரப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட மஞ்சளை சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.