இலங்கையில் அமெரிக்கா வகுத்த திட்டம் அம்பலம்

Waving flag of Sri Lanka and USA
இலங்கையில் நில அதிர்வு அளவீட்டு கருவியைக் கொண்டு அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேமி.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினால் பல்லேகல நில அதிர்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ள அளவீட்டுக் கருவி இந்தியாவையும், பாகிஸ்தானையும் உளவு பார்க்கவே நிறுவப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
இந்த இரு நாடுகளும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கண்காணிக்கவே இந்தக் கருவி நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்