März 28, 2025

அரசியல் கைதிகள் விடுதலை:நாமலும் பேசுகிறார்!

 

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றார்.

தேவையற்ற விதத்தில் இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய அவசியம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. தெரியாமல் செய்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்‌ஷ இளைஞர்கள் நாட்டின் பெறுமதிளான சொத்துக்கள“என்றார்.

“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அதிகமான விடங்களைச் செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடங்களைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையில் இதுவரை 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.