März 29, 2025

தமிழருக்கு அல்வா:கோத்தா ஜனாதிபதியாகி பறக்கிறார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில்  இலங்கை ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில்  இலங்கை ஜனாதிபதி முதல் முறையாக கலந்துகொள்ள உள்ளதுடன், நாடு கடந்து, சர்வதேச கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்