März 28, 2025

அடுத்த குண்டு:இலங்கையருக்கு இருவேளை உணவு!

இலங்கையர்கள் தங்களது உணவில் ஒரு வேளையினை தியாகம் செய்யவேண்டுமென பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார என்பவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜகத் குமார கூறினார்.

இதன் விளைவாக, சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தங்கள் சம்பளத்தை ஒரு மாதத்திற்கு கொவிட் நிதிக்கு தியாகம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.