März 29, 2025

இலங்கையில் முடக்கம் நீடிப்பு!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணி கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்க உத்தரவை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததுடன், இது இந்த மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.