März 31, 2025

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (12) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 6 கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது

குறித்த இசைக்கருவிகள் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.