März 31, 2025

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த லெக்பீஸை முகநூலில் பதிவேற்றியதுடன் அது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கையினையும் விடுத்துள்ளார்.

அதாவது காசை இவ்வாறு வீணடித்து ஒன்லைனில் உணவு வாங்க விரும்புபவர்கள் தன்னை போல ஏமாறவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.