März 28, 2025

இலங்கை:முடக்கம் மேலும் நீடிக்கப்படலாம்!

இலங்கையில் தற்போது அமலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் மாதம் இறுதி வரை முன்னெடுப்பதற்கு அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன் மாதம் 7ம் திகதி வரை நீடிப்பதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்த போதும் அதனையும் தாண்டி பயணத் தடை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ள காலப் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால் இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக தெரியவந்துள்ளது.