März 28, 2025

ஜயாயிரம்:நீர்க்குமிழியெனும் சிங்கள ஊடகங்கள்!

இலங்கை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக மீண்டும் ஜயாயிரம் வழங்கப்படுமென இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி, அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்கள் தெரிவித்ததுள்ளார்.

குறிப்பாக சமுர்த்தி பயனாளிகளுக்கு, வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு, முதியோர் கொடுப்பனவு பெறுவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு என பல்வேறுபட்டவர்களுக்கு ஜூன் 2ம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது.

இதனையே கோத்தா –மகிந்தவின் சவர்க்கார வெற்றுக்குமிழியென சிங்கள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.