März 29, 2025

ஊசி போட்டு வெசாக்?

வெசாக் நிகழ்வை நடத்துவதற்காக நயினாதீவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்ற முடியாதா என்று கேட்டுள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன.

நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்த கூட்டத்தில் நயினாதீவில் வெசாக் நிகழ்வில் கலந்துகொள்வோரை மட்டுப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  புத்தசாசன மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் செயலாளர் நயினாதீவில் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டுள்ளார். அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றி நிகழ்வை நடத்த முடியாதா என  கேட்டுள்ளார்.

இதன்போது அங்கு சுமார் 3 ஆயிரம் பேர் இருக்கின்றனர் அவர்களுக்கத் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் நாங்கள் தீர்மானிக்க முடியாது. அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதிலளித்துள்ளார்.