Oktober 23, 2024

அறிக்கையினை மாற்றினாரா கோத்தா?

Sri Lanka's former president Mahinda Rajapaksa (L) gestures after taking oath as country's Prime Minister towards his brother, President Gotabaya Rajapaksa (R) during a ceremony in Colombo on November 21, 2019. - Newly elected Sri Lankan President Gotabaya Rajapaksa on November 20 named his brother Mahinda as Prime Minister, cementing the grip on power of a clan credited with brutally crushing the Tamil Tigers a decade ago. (Photo by LAKRUWAN WANNIARACHCHI / AFP) (Photo by LAKRUWAN WANNIARACHCHI/AFP via Getty Images)

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உண்மையான அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்படக் கூடிய அபாயம் தற்போது காணப்படுகிறது. எனவே இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் போது அதனை ஆவண பாதுகாப்பு சபைக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அறிக்கையை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிலுள்ள விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. இந்த அறிக்கை ஜனாதிபதியால் தொடர்ந்தும் மறைக்கப்படுமானால் அது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று ராஜகிரியவிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

அதிலுள்ள விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்கும் உள்ளது. கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்திலும் இதனை வழியுறுத்தினோம். இது மாத்திரமின்றி அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறது. இதில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பக்கங்கள் காணப்படுவதால் அச்சிடுவதற்கு சிரமம் எனில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களிலாவது பதிவேற்ற முடியும்.

இதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாவிட்டால் இதனை அரசாங்கம் மறைக்கின்றதா? எந்த சந்தேகம் எழும். இதனை மறைத்து வைப்பதற்கான உரிமை ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ இல்லை.

உண்மையான அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்படக் கூடிய அபாயம் தற்போது காணப்படுகிறது. எனவே இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் போது அதனை ஆவண பாதுகாப்பு சபைக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை ஒரு சட்டமாக உருவாக்கினாலும் அது வரவேற்கத்தக்க விடயமாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.