März 31, 2025

அவநம்பிக்கை பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ள இந்த அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய என்பன அறிவித்துள்ளன.

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கு மாறாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அதனை நிறைவேற்றுவதற்கு அனுமதித்ததாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் அவநம்பிக்கை பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert