März 28, 2025

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு…

காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 450 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 100 ரூபாவுக்கும்

ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் உள்நாட்டு சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 210 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 298 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 270 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபாவுக்கும்

425 கிராம் ரின் மீன்மீனின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 520 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert