வடமாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் கலந்துரையாடல்

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் துறை சார்ந்தோர்களுடன் கலந்துரையிடலில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார். 

ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர்,  ஆளுநரின் ஒருங்ககிஇணைப்பு செயலாளர், பணிப்பாளர் சுற்றுலாப் பணியகம், சுற்றுலாத்துறை பணியாக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம், திணைகள உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பான தற்போதைய நிலையினை கேட்டு அறிந்து கொண்ட ஆளுநர், நெடுந்தீவில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார். 

அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமாக வடக்கு மாகாண மக்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுவதற்கு சாதாகமான நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர், 

சுற்றுலாத்துறையை பிரதேசங்களின் தன்மையை ஆராய்ந்து   அபிவிருத்தி மேற்கொள்ளுமாறும், சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் மேற்கொள்ளும் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் மரநடுகை தொடர்பாகவும் முக்கியமான விடயங்களை தெரிவித்தார். 

அத்துடன் விரைவாகவும் வேகமாகவும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார்.

 உலக சுற்றுலா தினத்தை எமது பிரதேசங்களில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert