September 16, 2024

யேர்மனி சோலிங்கன் தாக்குதலாளி கைது! ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது

யேர்மனி சோலிங்கன் நகரில் கத்திக்குத்துக்கு நடத்தியவரை மிகப்பொிய தேடுதல் வேட்டையின் பின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலாளி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் 56 மற்றும் 67 வயதுடைய இருவர் மற்றும் 56 வயதுடைய பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர். கத்திக்குத்துக்கு உள்ளான மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் கழுத்தில் குத்திக் கொல்லப்பட்டனர்.

சந்தேக நபர் அழுக்கு இரத்தக்கறை படிந்த ஆடையில் சரணடைந்ததாக செய்தி வெளியிட்டன.

தாக்குதலாளி ஒரு சிரிய நாட்டவர் எனத் தெரிய வந்ததுள்ளது. மேலும் அவர் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறி டிசம்பர் 2022 இல் ஜெர்மனிக்கு வந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறப்புப் பணிக்குழு (SEK) அதிகாரிகள் சந்தேக நபருடன் தொடர்புடைய அகதிகள் மையத்தில் நுழைந்து ஒருவரைத் தடுத்து வைத்துள்ளனர் என பில்ட் என்ற நாளிதழ் தெரிவித்தது. தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே அறிந்த 15 வயது சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்த அகதிகள் மையம் Fronhof – Solingen இன் சென்ட்ரல் மார்க்கெட் சதுக்கத்தில் இருந்து 300m (984ft) தொலைவில் உள்ளது.

சோலிங்கன் – இரும்புத் தொழிலுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். சுமார் 160,000 மக்களைள் தொகையைக் கொண்டுள்ளது. இந்நகரில் உற்பத்தி செய்யப்படும் கத்திகள் உலகத்தில் பிரபலமானது. விலை கூடியது. இது டுசெல்டார்ஃபுக்கு கிழக்கே 25 கிமீ (15 மைல்) தொலைவில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சோலிங்கன் நகரில் அதன் 650 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடும் திருவிழாவின் போது இந்த நபர் நடத்திய கத்திக்குத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

மூன்று பேரைக் கொன்ற சோலிங்கனில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்களின் விசாரணையை ஜெர்மனியின் பெடரல் வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்ற குற்றத்தை சந்தேக நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவருக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் ஆதாரங்கள் குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஆராய்ந்து வருகின்றது.

26 வயதுடைய சிரியாவைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும், தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் 2022 ஆம் ஆண்டு அகதியாக ஜேர்மனிக்கு வந்து பீல்ஃபெல்ட் நகரில் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாக  ஜேர்மன் செய்தி ஸ்பீகிள் நாளிதழ்  தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை தெற்கு நகரமான Karlsruhe க்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு சிவல் மற்றும் கிரிமினல் உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்படுத்தவுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert