Juni 28, 2024

நாடு திரும்பிய வீராங்கனை லக்சனா லோகதாசன் அவர்களை நெதர்லாந்து விமான நிலையத்தில் வரவேற்றனர்.

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று, வெற்றிவாகை சூடி, தமிழினத்திற்கு பெருமை சேர்த்த அணியில் நெதர்லாந்து மண்ணில் இருந்து நமது அணிக்காக நோர்வே சென்று விளையாடிவிட்டு இன்று (10.06.2024) நாடு திரும்பிய வீராங்கனை லக்சனா லோகதாசன் அவர்களை விமான நிலையத்தில் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு பொறுப்பாளரும், நெதர்லாந்து மகளிர் அமைப்பினரும் பூங்கொத்து வழங்கி வாழ்த்தி வரவேற்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert