Juli 27, 2024

மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024-பிரித்தானியா

மறைக்கவோ ,மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள் …! 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது. தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்களால் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பமான நீதிக்கான போராட்டமானது பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் முன்பாக சென்று பிரதமர் வதிவிடம் முன்பாக நிகழ்வானது ஆரம்பமானது. பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலை பண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர் திரு அனுரா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் திருமதி பாப்ரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். மாவீரர் சுடர்த்தமிழ் அவர்களின் தாயார் திருமதி ரஞ்சினி பாலச்சந்திரன் அவர்கள் நினைவு சுடரினை
ஏற்றிவைத்தார்கள்.அகவணக்கத்தினை தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கமும் தீப வணக்கமும் இடம்பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert