Mai 2, 2024

உண்மைகளைப் பேசலாமா? ஈழத்தமிழர்களாகிய நாம் அரசஅறிவியலில் யுத்தம் செய்தோமா இந்தியாவிடம்?

உண்மைகளைப் பேசலாமா? ஈழத்தமிழர்களாகிய நாம் அரசஅறிவியலில் யுத்தம் செய்தோமா இந்தியாவிடம்?

1983 ல் ஆயுதப் போராட்ட பயிற்சி கேட்டோம்

1986 வரை இந்தியாவில் குறிப்பாக முடிவெடுக்கும் டெல்லியில் தங்கியிருந்து அரசியல் பேசாது தமிழகத்தில் இருந்து ஆயுத போராட்டத்தை வளர்க்க வழி தேடினோம்.

1986 ஓட்டுமொத்தமாக அனைவரும் இந்தியாவில் இருந்து புறப்பட்டு விட்டோம். டில்லியில் அரசியல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்லுறவைப் பேண ஒர் கதவை திறக்காமல் வந்தோம்.

1987ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் குறித்து Report எழுத ஈழத்தமிழர்களாகிய நாம் டெல்லியில் நிற்காமல் போனோம். எமது கருத்துகளையும் எமது வலிகளையும் அவர்களே எழுத விட்டோம்.

எமது வலிகளை எமது அர்ப்பணிப்புக்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யும் அரசியல் வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

1991 ஆம் ஆண்டின் பின்னர் 2009ஆம் ஆண்டுவரை ஈழத்தமிழர்களாகிய நாம் இந்திய அரசுடன் சமமாக வெளிப்படையாக டில்லியில்/தமிழகத்தில் இருந்து பேசிட முடியாத நிலையில் இருந்தோம் .

2010ஆம் ஆண்டின் பின் இருந்து இன்றுவரை கூட அரசியல் ரீதியான நட்பை டெல்லியில் உருவாக்க முனையாது 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் அழைப்பைப் புறம்தள்ளி ,கடந்த ஆண்டு ஈழத்தமிழர்களாகிய நாம் ஈழத்தமிழர்களாகிய எமது அரசியல் தீர்வை பேச புலம்பெயர்ந்த நாட்டில் 25 வருடம் வாழ்ந்தும் எல்லா வசதி இருந்தும் தொடர்ச்சியாக இந்தியாவில் டெல்லியில் வந்து நின்று பணியாற்றுவதைக் கூறி எமது மேடைகளில் ஏறி ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து உங்கள் கருத்துக்களை டெல்லியில் வந்து கூறுங்கள் என ஒவ்வொருக்கும் அழைப்புக் கொடுத்தும் வந்து பேச ,முன்வைக்க வராதவர்கள் எமது ஊடகங்கங்களில் கூட எமது பணியைப் பற்றி பேசி எமது பணித்திட்டத்தில் உள்ள சரிபிழைகளை வெளிப்படையாக கூறிட முன்வராத இக்குழுவில் உள்ள,வேறு குழுக்களில் உள்ள அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தனிமனிதர்கள் …இவர்கள் உண்மையில்??

கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடிதம் எழுதி கொடுத்த பின் பேசாது இருப்பதுதான் முறையா? இதுதான் அரசியலில் உறவை வளர்ப்பதா?
இதுதான் அரசியல் உறவை வளர்ப்பது என்றால் இலங்கை அரசானது இரண்டு தூதரகங்களை மிகப்பெரிய அளவில் இந்தியாவில் அமைத்து அங்கு பணியாற்ற பணியாளர்களை வைத்து இருப்பது ஏன்? மாதாந்தம் கோடிக்கணக்கில் செலவு செய்வதும் ஏன்?

ஒரு நாடு உருவாக வேண்டும் என்று போராடியதாக போராடிக்கொண்டு இருப்பதாக அல்லது ஒரு இனத்தின் உரிமைக்காக தமிழ்த்தேசியவாதிகளாக தம்மை வெளிக்காட்டுகின்றவர்களுக்கு அயலகத்தில் உள்ள வளர்ந்து வரும் நாட்டை கையாள தெரியாமல் இருப்பதை எவ்வாறு சொல்வது

அரச அறிவியலில் முதிர்ச்சியற்ற நிலை என்பதா?

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக போராடாத சுயநல அரசியல்வாதிகள் என்பதா

இலங்கை நாடாளுமன்றத்திற்காக தமிழ்த்தேசியம் பேசுகின்ற எமதினத்தை அழிக்கின்றவர்கள் என்பதா?

காவியா
08:21
23/07/23
பெரிய பிரித்தானியா

பணம் கொடுத்து டிக்கட் போட்டுக் கொடுத்தால் மட்டுமே இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்து ஈழத்தமிழர்களின் பிரச்சனை குறித்து பேசுவோம் என்பவர்களை அழைத்து வந்து பேசவேண்டிய தேவை எமக்கில்லை.
ஈழத்தமிழர்களின் மீது ஆழமான பற்றுக் கொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert