Mai 20, 2024

கனேடிய தூதர் நாடுகடத்தல்?

“இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில் தெற்கில் கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் அரங்கேற்றப்பட்ட திட்டமிடப்பட்ட இன அழிப்பு தொடர்பில் கனேடிய அரசின் செயற்பாடுகள் தென்னிலங்கையில் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது.

இந்நிலையில் குருந்தூர் மலையில் இனமோதலை உருவாக்க முயன்ற தமிழ் அரசியல்வாதி துரைசாரா ரவிகரன் மற்றும் தமிழ் பிரமுகர்களை சந்தித்துள்ளதாக கனேடிய தூதர் மீது தென்னிலங்கை இனவாத தரப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.

எனவே குருந்தூர் மலை விவகாரத்தில் தலையிட்டு சிங்கள மக்களை அவமதித்துள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரியுள்ளார்.

“குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்க முயன்றவர்களை சந்தித்துள்ளார் கனடா உயர்ஸ்தானிகர்.இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக  அவரை அறிவிக்கவேண்டும். 2000 வருடத்திற்கு மேற்பட்ட பௌத்த ஆலயத்தை அவர்கள் அழிக்க முயன்றனர்.

அவர்களை கனேடிய தூதர் சென்று சந்தித்துள்ளார். உயர்ஸ்தானிகரின் இந்தச் செயல், இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்ட மிகவும் அவமானகரமான செயல்.

அது ஒரு சர்ச்சைக்குரிய செயல் என்பதால் கனடா உயர்ஸ்தானிகரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபர் என அறிவிக்கவேண்டும் என பரிந்துரை செய்வதாக” சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert