Mai 17, 2024

சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா? – நேரு குணரட்ணம்

ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், „சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா?“, எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில்
வரைந்திருந்தேன். „சிறீலங்காவில் ஒரு அரசாங்கம் பதவியில் இருக்கிறதா? என என்னும் வகையில், அனைத்துவிவகாரங்களும் கோத்தாவின் கீழ் இராணுவமயப்பட்டுவருவது, தொடர்;ந்தும் தீவிரமடைகிறது“,  எனவேறு அதில் குறிப்பிட்டிருந்தேன்.

அதன் பின்னரான 3 மாதங்களில் அது நோக்கிய பாதையில் பலவிடயங்கள் நடந்தேறின. இவ்வாறான ஒரு நிலையின் ஆபத்தை கடந்த ஆண்டு சனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே, சர்வதேச பரப்பில் பலர் பார்த்த தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகவே தெரிவித்திருந்தேன். தற்போதைய சனாதிபதி தான் இதுவரையிலான சனாதிபதிகளில் அதிகாரம் குறைந்தவர். ஆனால் இவர் தான் அனைவரிலும் அதிகாரம் கொண்டவர் போல் நடந்து கொள்வார் என்பதையும் அதில் தெரிவித்திருந்தேன்.

ஏனோ எங்களிடம் ஒருவருடைய குணாம்சங்களின் அடிப்படையில், அவர் எப்படி நடந்து கொள்வார்? என்பதை சரியாக கிரகித்து, அதற்கேற்ற வகையில் எம்மை முன்கூட்டியே ஒருங்கமைத்துக் கொள்ளும் பக்குவம் அரிதாகவே வெளிப்படுகிறது. தற்போது தனது இராணுவ ஆட்சியை பெரியளவில் கோத்தா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அதில் அவர் புதிதாக ஒரு சனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கி, அதில் உள்ளவர்களின் பெயரையும் அதன் பணிகளையும் வேறு பட்டியலிட்டுள்ளார்.

சனநாயக அரச கட்டமைப்பு எனக் கூறிக் கொள்ளும் இன்றைய அரச கட்டுமானத்தில், அமைக்கப்பட்டுள்ள அந்த சனாதிபதி செயலணியின் 13 உறுப்பினர்கள் வருமாறு,
Major General (Retired) Kamal Gunaratne – Secretary to the Ministry of Defence; Lieutenant General Shavendra Silva -Commander of the Sri Lanka Army; Vice Admiral Piyal de Silva – Commander of Sri Lanka Navy; Air Marshal Sumangala Dias – Commander of the Sri Lanka Air Force; C.D. Wickremarathne – Acting Inspector General of Police; Major General (Retired) Vijitha Ravipriya – Director General of Customs; Major General (Retired) Jagath Alwis – Chief of the National Intelligence; Major General Suresh Salley –  Director of State Intelligence Service 9; Major General A. S. Hewavitharana – Esquire Director of Army Intelligence Unit 10; Captain S.J. Kumara – Esquire Director of Navy Intelligence Unit 11; Air Commodore M.D.J. Wasage – Director of Air Force Intelligence Unit 12; T. C. A. Dhanapala –  Deputy Inspector-General of Police, Special Task Force of Police

இப்போது சொல்லுங்கள் இதில் சிவில் அரச பணியாளர் யார்? அனைவரும் ஒருவிதத்தில் பாதுகாப்பு கட்டுமானங்களின் தளபதிகள், இல்லையேல் ஓய்வுபெற்ற தளபதிகள். பலருக்கு முள்ளிவாய்காலுடன் வேறு பலத்த தொடர்பு உண்டு. மறந்துவிடாதீர்கள் இன்றும் மகிந்தா தலைமையில் ஒரு அமைச்சரவை பதவியில் வேறு உண்டு.

சரி இவர்களின் பணி தான் என்ன? நாட்டின் பந்தோபஸ்து ஏதாவது ஆபத்தில் உள்ளதா? இல்லை அண்டை நாட்டு மன்னர் யாராவது போர் பிரகடனம் செய்துவிட்டாரா? ஏற்கனவே மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த கோவிட்-19 வைரஸ் விடயம் கூட, விசேட செயலணி ஒன்றின் ஊடாக முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கடந்து என்ன தேவை? அமைக்கப்பட்டுள்ள செயலணியின் பணி குறித்து கோத்தா பின்வருமாறு தெரிவிக்கின்றார்