Juli 27, 2024

வரலாறுகள்

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2024)

மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடுமனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன்,...

2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் சாதனை படைத்த தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் ...

கொனீபா மகளிர் உலகக்கிண்ணம் – இரண்டாவது இடத்தை வாகை சூடிய தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆம்  ஆண்டின்  இறுதியாட்டமானது  08.06.2024    ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA   மைதானத்தில்  நடைபெற்றது...

கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கு இடையிலான COFINA WOMENS WORLD FOOTBALL CUP க்கான போட்டிகள் நோர்வே-யில்  ஆரம்பித்தது.. அதில் பங்கேற்ற தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி  வெற்றிபெற்றுள்ளது .தமிழீழத் ...

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

ழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள் - மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடு நினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்று தேசவிடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்குப் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழ நடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப் போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின் ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின்  பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசு இறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின் அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான்  என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர். உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர் இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர் அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச் சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என அறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்க வேண்டும்.  இவ்வறிவிப்பின் ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இவையெல்லாம் சரிவர நடந்தேறினால், தேசியத்தலைவரின் சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால் அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால் உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும் என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமது எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவான நிகழ்ச்சிநிரலாகும். தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமான இப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்ப அங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில் போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும் சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கைகள்  களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதி திரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின் அரசியல் கட்டுக்கதைகளை முத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்ற காகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப் பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும் சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டை அழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பை இல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அன்பார்ந்த மக்களே! ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின் வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்பு நடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும் சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும் நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக் கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின்  சிந்தனை மூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளை விளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால் உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானது இதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாக நம்புகிறோம். பேரன்புமிக்க எமது மக்களே ! காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம் கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறான உண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப் புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்....

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வின்

மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ…...

புலிகளுடனான சண்டைகளில் எதற்காக சீக்கியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார். அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர்...

தலைவர் பிரபாகரன் பற்றி பரவிய வதந்திகள்

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பல முனைகளிலும் நகர ஆரம்பித்திருந்த இந்தியப் படையினர், மனித வேட்டைகளை நடாத்தியபடியே தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். படுகொலைகள், கொள்ளைகள், வீடுடைப்புக்கள், பாலியல்...

ஒரு கையை பின்னால் கட்டியபடி அமைதிப் படை

இந்தியப் படைகள் ஈழமண்ணில் நிகழ்த்தியிருந்த மனித வேட்டைகளுள், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர்கள் மேற்கொண்டிருந்த கொலைகளே மிக மோசமான நடவடிக்கை என்று பதியப்பட்டிருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலையினுள்...

இந்தியப் படை ஜவான்கள் புறப்பட்டார்கள்: மனித வேட்டைக்கு…

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கையின் நகர்வுகள் அனைத்துமே புலிகளின் கடுமையான இடைமறிப்புத் தாக்குதல்களினால் பலத்த நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன. இந்தியாவினதும்,...

வெட்கமடைந்த இந்தியப் படையினர்….!

இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன. சிறிலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த...

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்…

ஒக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த சில வாரங்களாகப்...

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள்

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப்...

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள்

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை...

ராஜீவ் காந்தியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற புலிகள்!

இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நெறிப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும்...

ராஜீவ் காந்தி நெறிப்படுத்திய யுத்தம்!

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது. பலாலி, காங்கேசன் துறை, பண்டத்தரிப்பு, யாழ்...

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது

யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக, இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை...

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள்.

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியாவின் துரோகங்கள் 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி முதல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற ஆரம்பித்திருந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக அதுவரை இராஜதந்திர...

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது....