Mai 26, 2024

அறிவித்தல்கள்

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

ழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள் - மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடு நினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்று தேசவிடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்குப் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழ நடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப் போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின் ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின்  பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசு இறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின் அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான்  என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர். உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர் இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர் அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச் சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என அறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்க வேண்டும்.  இவ்வறிவிப்பின் ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இவையெல்லாம் சரிவர நடந்தேறினால், தேசியத்தலைவரின் சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால் அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால் உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும் என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமது எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவான நிகழ்ச்சிநிரலாகும். தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமான இப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்ப அங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில் போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும் சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கைகள்  களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதி திரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின் அரசியல் கட்டுக்கதைகளை முத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்ற காகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப் பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும் சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டை அழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பை இல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அன்பார்ந்த மக்களே! ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின் வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்பு நடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும் சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும் நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக் கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின்  சிந்தனை மூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளை விளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால் உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானது இதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாக நம்புகிறோம். பேரன்புமிக்க எமது மக்களே ! காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம் கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறான உண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப் புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்....

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் உயிரிழந்தார்

மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளருமான விமல் சொக்கநாதன் அவர்கள் விபத்தில் உயிர் இழந்துள்ளார்இவர் தமிழர்களின் ஒரு பொக்கிசமாக வானொலித்துறை அறிவிப்பாளராகவும் புலம் பெயவாழ்விலும் தன் ஊடகப்பணியை வானொலி ,தொலைக்காட்சிஎன...

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் (18) மாணவர்களுக்கு (10,000) ரூபா வீதம் நிதியுதவி வங்கிப்புத்தகங்கள் இட்டு வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - (ஐரோப்பா)(இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய)Tamilische Bildungsverei Deutschland - (Europa)“கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்குமாடல்ல மற்றை யவை“கல்வி அபிவிருத்தி நிதி உதவியேர்மனி...

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்‘ சோபகிருது வருட (10வது) பிரம்மோற்சவம்

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்' சோபகிருது வருட (10வது) பிரம்மோற்சவம் முகூர்த்தக்கால் நாட்டல்-90823 கணபதி ஹோமம் கிராம சாந்தி,வாஸ்து சாந்தி,பிரவேசபலி, மிருத் சங்கரணம்-200823 கொடியேற்றம்:21.0823 மஞ்சத்திருவிழா-30.0823...

நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா

நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கினை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) ரொக்கெட் மூலம் இந்த...

எங்கள் தந்தை ஜே.ஜெயக்குமார் அவர்களின் அவர்களின் நினைவு கூறலுடன் இணைய அழைக்கிறோம்

அன்பான உறவுகளே எங்கள் தந்தை ஜே.ஜெயக்குமார் அவர்களின் நினைவு கூறலும் ஒன்றினைந்த இணைவும் எனநாங்கள் ஒரு பிரார்த்தனை மற்றும் மதிய உணவோடு அவர் நினைவு சுமந்தநாளாக கூடி...

பிராங்போட் தமிழ்மன்றம் நடா த்தும்ஆண்டுவிழா!28.01.2023

பிராங்போட் தமிழ் நடா த்தும் ஆண்டுவிழா 28.01.2023Saalbau NiddaHarheimer Weg 18-22 60437 Frankfurt17-00மணிக்கு ஆரம்பாகும், இசைச்சாரல் இன்னிசை நேரம் திரையிசை நடனங்கள் நகைச்சுவை நாடகங்கள் இன்னும்...

புலம்பெயர் தேசத்தில் வாழும் தொப்புள் கொடி உறவுகளிடம் .தயவுசெய்து எனக்கு இந்த உதவியை செய்து தாருங்கள்

Kunarathnam kokularajah: அவசர உதவி போராட்ட காலத்தில் இயக்கத்திற்க்கு ஜேர்மனி நாட்டில் இருந்து வந்த ஒருவர் போராட்டம் முடிந்த பின்பு செஞ்சோலைப் பிள்ளை ஆகிய கோதை என்பவரை...

எரிமலை வெடிப்பால் பசிபிக் கடலில் புதிதாக வந்தது தீவு

ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. இந்த எரிமலை வெடித்த...

IBC தமிழ் வழங்கும் உறவின் ஒளி! 01 – JAN 2023 GERMANY

IBC தமிழ் வழங்கும் உறவின் ஒளி ஈழத்து கலைஞர்களின் மாபெரும் சங்கமம்! 2023-ம் ஆண்டில் ஈழத்து கலைஞர்களின் மாபெரும் சங்கமம்!,GERMANY 01 - JAN DORTMUND டில்...

சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் காலமானார்

சுவிஸ் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் அவர்கள் 26.08.2022 அன்று காலமானார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சூரிஜ் சிவன் ஆலய...

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம்-தங்கரதபவனி 31.07.2022

அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்Hindu Tamil Kultural Center Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P-0231 72515165, Fax-0231...

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய பன்னிரண்டாவது வருடாந்த திருவிழா வித்வானா – 202002.07.2022 தொடக்கம் 13.07.2022 வரை

அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாவது வருடாந்த திருவிழா வித்வானா - 2020 02.07.2022 தொடக்கம் 13.07.2022 வரை சிவனேயச் செல்வர்களே நிகழும் மங்களகரமான...

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை...

பிரித்தானியாவில் தமிழர் காணியில் குடிகொண்டார் புதுமை அந்தோனியார்.

கோடி அற்புதர் என பல் சமூக மக்களால் அழைக்கப்பட்டுவரும் புனித அந்தோனியாரின் ஆண்டுப் பெருவிழா பிரித்தானியாவின் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள புனித அற்புத அந்தோணியார்...

நலவாழ்வு அமைப்பு நடத்தும் சித்திரை மாத இணையவழிக் கருத்தரங்கு!

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளும்,வரமுன் காப்போம் என்ற விரிவான விளக்கத்துடன். *புற்றுநோய் என்றாலே இறப்பு நிச்சயம் என்று பயந்து வாழ்வதைவிட அதை பற்றி நீங்கள் கற்றுக்கொண்டு வராமல் பாதுகாக்க...

காணாமல் போன கப்பல் 107 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து மிகப் பொிய கப்பல் விபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அண்டார்டிக் பகுதியில் 1915 ஆம் ஆண்டு கடல் பனிக்குள் சிக்கி கடலில் மூழ்கிப்...

சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும்; ரஷியா எச்சரிக்கை

சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷிய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா...

எண்டோஸ்கோபிக் காது அறுவை சிகிச்சை 27.02.2022 16.30 மணி ஐரோப்பிய நேரம் 21.00 மணி Zoomவழி

எண்டோஸ்கோபிக் காது அறுவை சிகிச்சை 27.02.2022 16.30 மணி ஐரோப்பிய நேரம் 21.00 மணி இலங்கை / இந்திய நேரம் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர்...

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் “ எழுத்தும் சொல்லும் வாழ்வு ” இணைவும் எழுத்தாளர்கள் பகிரும் கருத்துரையாடல்

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் “ எழுத்தும் சொல்லும் வாழ்வு ” இணைவும் எழுத்தாளர்கள் பகிரும் கருத்துரையாடல் வாசகர்கள் - - - பகிர்வும் 13.02.2022Z00M ல்...