März 28, 2024

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம்-தங்கரதபவனி 31.07.2022

அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
Hindu Tamil Kultural Center Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P-0231 72515165, Fax-0231 72515166, மின்ன ஞ்சல் : info@sivantempel-dortmund.de
ஆடிப்பூரம்-தங்கரதபவனி 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற உள்ளது

சிவனடியார்களே!
யேர்மனியில் டோட்முண்ட் (கொம்புறுாக்) மாநகரில் மௌலீஸ்வரம் பெயர் விளங்க வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரப் பெருமான் திருத்தலத்தில் நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆடித் திங்கள் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (31.07.2022)காலை 08:00 மணியளவில் அருள்மிகு சாந்தநாயகி அம்பாளுக்கு நடைபெறும் விசேட அபிசேகங்கள் பூசைகளைத் தொடர்ந்து பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வுகளும் வசந்த மண்டப பூசையும் அதனைத் தொடர்ந்து அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் தங்கரதத்தில் எழுந்தருளி உள்வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதக்காட்சியும் – நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. அடியார்கள் வருகைதந்து, எம் பெருமானையும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாளையும் வழிபட்டு, அருட்கடாட்சம் பெற்றேகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : ஆடிப்பூரத் தினத்தில் (31.07.22 ) நிகழ்வுகள் காலை 08.00 மணிக்கு
ஆரம்பமாகி முற்பகல் 11.00 மணிக்கு நிறைவுபெறும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு அடியார்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
பிரதோச விரதம் : ஆடி அமாவாசை விரதம் : – வரலக்சுமி விரதம் :
25.07.2022 திங்கட்கிழமை 28.07.2022 வியாழக்கிழமை 05.08.2022 வெள்ளிக்கிழமை
இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபை
ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை வேளை: 09.00 – 11.30 வரை (பூசைநேரம்: 10.00 மணி முதல்) மாலை வேளை: 17.00 – 19.30 வரை (பூசைநேரம்: 06.00 மணி முதல்
விசேட தினங்களில் நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்
வங்கி விபரம் Hindu Tamil Kultural Center Dortmund e.V
Bank: Commerzbank IBAN: DE114408 00500119 151200,
BIC: DRESDEFF440

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert