Juni 28, 2024

வடக்கில் ரணிலால் வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தில் முறைகேடு.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியால் பட்டதாரி ஆசிரிய சேவையினருக்கான நியமனங்கள் வழங்க்கபட்ட நிலையில் நியமனத்தில் மோசடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.அரசியல் தரப்புக்களது பட்டியல் பிரகாரம் நியமனங்கள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களிற்கும் நியமனம் வழங்கப்படுமென வடக்கு ஆளுநர் உறுதி மொழி வழங்கி விடயத்தை மௌனிக்க வைத்திருந்தார்.

இந்நிலையில்  கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்று வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

நுpயமனங்கள் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குரல்கள் இயக்கம் எனும் சிவில் அமைப்பின் சட்டத்தரணிகள் மேற்கொண்ட முயற்சியினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் கிழக்கிலும் அரசியல் கட்சிகளது சிபார்சுகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert