März 28, 2024

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

26.9.2022 ஞாயிற்றுக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம,; வாகனப்பவனி கவனயீர்ப்புப் போராட்டம் பேர்லின் நகரத்தில் எழுந்தருளியிருக்கும் மயூரபதி முருகன் ஆலய முன்றலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகி பேர்லினில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றி வலம் வந்தது.

லெப். கேணல் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி ஊர்தியின் முன்பக்கத்தில் பறந்தபடி வாகனப்பவனி தலைநகரின் வீதிகளில் பவனி வந்தது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கூடாக வலம்வந்ததுடன் யேர்மனியப் பாராளுமன்றம், வெளிவிவகார அமைச்சகம் அமைந்திருக்கும் பகுதியூடாக வெளிநாட்டுத் தூதரங்கள் அமைந்திருக்கும் வீதியினை அடைந்தது.

குறிப்பாக இந்தியத்தூதரத்திற்கு முன்பாகத் தரித்துநின்றது. பின்பு நகரமத்தியில் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மக்கள் சுடர்ஏற்றி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தி நிகழ்வை நிறைவு செய்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert