Mai 1, 2024

தென்சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம்! அமெரிக்காவின் அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்காவுக்கு சொந்தமான அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் ஆசிய பசுபிக் பிராந்திய கடலில் மூழ்கி இருந்த போது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடையாளம் தெரியாத பொருளொன்றினாலேயே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தெளிவில்லை எனவும் எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பல் பாரியளவில் பாதிப்பும் இன்றி இயங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென் சீனக் கடலில் சர்வதேச எல்லையில் இந்த சம்பவம் நடந்ததாக பெயரை வெளியிடவிரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது 11 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.

காயமடைந்த அனைவருக்கும் நீர்மூழ்கி கப்பலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவமானது தென் சீன கடல் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும் நீர்மூழ்கி கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

சம்பவத்தில் நீர்மூழ்கி கப்பலின் அணு உலைக்கு சேதங்கள் ஏற்படவில்லை என அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்மூழ்கி கப்பல் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் நடவடிக்கைகளை பாதுகாப்பாக முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்த விடயத்தினை அமெரிக்க கடற்படையினர் வெளிப்படுத்தவில்லை எனவும் மேலும் தெரியவந்தள்ளது.