Mai 6, 2024

முழுமையாக முடக்கப்பட்ட இலங்கை – அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தாலும், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இறுதியாக நாட்டில் 3,839 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை, நேற்றுமுன்தினம் 195 கொவிட் மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இது நாட்டில் கொவிட் பரவலடைய ஆரம்பித்த காலம் முதல் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்கள் மற்றும் மரணத்தின் எண்ணிக்கையாகும்.

இதற்கு அமைய எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு இராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.