Mai 4, 2024

செவ்வாய் கிரகம் செல்லும் மக்களின் அபிளிகேஷன் எகிறியது: தற்காலிகமாக நிறுத்திய நாசா !

செவ்வாய் கிரகம் செல்லும் மக்களின் அபிளிகேஷன் எகிறியது: தற்காலிகமாக நிறுத்திய நாசா !

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம், 2037ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் சென்று குடியேற விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தது. இதனை அடுத்து ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் நாசா நோக்கிப் பறந்துள்ளது. அவற்றில் சிலரை மட்டுமே தெரிவு செய்து நாசா அவர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து வருகிறது. செவ்வாய் கிரகம் போலவே ஒரு இடத்தை செயற்கையாக உருவாக்கி. அங்கே அவர்களை விட்டு பயிற்ச்சி கொடுக்கிறது நாசா. இன் நிலையில் மேலும் பல ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்து கொண்டு இருப்பதனால்.

நாசா விண்ணப்பங்களை அனுப்பவேண்டாம் என்று நிறுத்தி உள்ளது. 2037ம் ஆண்டில் பாரிய ராக்கெட் ஒன்று, மனிதர்களை ஏற்றிக் கொண்டு செவ்வாய் கிரகம் நோக்கிப் புறப்பட ஆரம்பிக்கும். அதற்கு முன்னதாக, அங்கே வதிவிடங்களை நிறுவ நாசா ஏற்பாடுகளை செய்து வருகிறது.