Mai 8, 2024

அம்பாறை நாவிதன்வெளியும் போச்சு?

அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வசமிருந்த நாவிதன்வெளி பிரதேச சபை 17 வருடங்களின் பின்னராக சிங்கள தரப்பிடம்

இழக்கப்பட்டுள்ளது.பிரதேசசபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த எ;னபவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் 17 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமிருந்த நாவிதன்வெளி பிரதேசசபையின் ஆட்சி கைமாறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.இந்நிலையில் அப்பதவி வெற்றிடமானதையடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான

புதிய தவிசாளர் தெரிவு செய்வதற்கான தேர்தலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் நடாத்திவைத்தார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்மொழியுமாறு அவர் சபையைக் கோரியபோது இருவரின் பெயர்கள் தவிசாளருக்காக பிரேரிக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் பதில் தவிசாளருமான ஏ.கே. அப்துல் சமட் சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்தவின் பெயரை பிரேரித்தார். அதனை சுயேட்சை குழு உறுப்பினர் தி. யோகநாயகன் ஆமோதித்தார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்தோனி சுதர்சனை அக்கட்சி உறுப்பினர் முத்துக்குமார் விக்னேஸ்வரன் பிரேரிக்க அதே கட்சியை சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரான மு.நிரோஜன் வழி மொழிந்த நிலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதனடிப்படையில் வெளிப்படையிலான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்தவிற்கு ஆதரவாக 07 வாக்குகளும் மற்றையவரான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்தோனி சுதர்சனுக்கு 06 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் போது 13 பேர் கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் வாக்களிப்பு அடிப்படையில் சுயேட்சை குழு உறுப்பினர் உறுப்பினரான அமரதாஸ ஆனந்த வெற்றி பெற்ற நிலையில் தவிசாளராக பிரகடனம் செய்வதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் அறிவித்தார்.

கூட்டமைப்பின் முன்னைய பங்காளிகளாக இருந்த ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் நல்லாட்சிக்கான முன்னணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்து சிங்கள பிரதேசசபை தவிசாளரை தெரிவு செய்துள்ளனர்.