அங்கயனின் பிரச்சாரத்தில் போதைபொருள்?

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் இங்கு வைத்தே கைது செய்யப்பட்டனர்.

நான்கு மாணவர்களுக்கும் கபொத சாதாரணதரத்தில்  பெறுபேறு 7ஏ மற்றும் 8ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்தவாரம் மாணவர்களால் பயன்படுத்த முடியாதுள்ள இந்த மலசல கூடம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என ஊடகவியலாளர் ஒருவர் எச்சரித்திருந்தார்.

இதனிடையே ‚போதைப்பொருளற்ற வட்டக்கச்சி‘ எனும் கருத்திட்டத்தில் 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் களத்தில் குதிப்பு. 420 லீட்டர் காடி, 10 லீட்டடர் கசிப்பு முற்றுகையில் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏனைய பிரதேச இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள சமூக ஆர்வம்கொண்ட இளைஞர்களுடன் கரம் கோர்க்க கிளிநொச்சி ஊடகவியலாளர்களும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.