இலங்கையில்… மொத்த கொரோனா நோயாளிகளில் 350 பேர் கடற்படையினர்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா வைரஸ் தொற்றி நோயாளிகளில் சுமார் 350 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் பழகிய நபர்கள் எனவும் 10 இராணுவத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 33 நோயாளிகளில் 31 பேர் கடற்படையினர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவர் கடற்படையினருடன் நெருங்கி பழகியதன் காரணமாக இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 194 பேர் குணமடைந்துள்ளதுடன் 553 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தொற்று விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.

You may have missed